நிம்மதி பெருமூச்சு விட்ட முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்தது.

 

நிம்மதி பெருமூச்சு விட்ட முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்தது.

மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தால் சரிந்து கிடந்த பங்கு வர்த்தகம் இன்று நன்றாக இருந்தது. பல நிறுவன பங்குகளின் விலை குறைந்த இருந்ததால் அந்த பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இதனால் இன்று பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. இதுபோக சர்வதேச நிலவரமும் சாதகமாக இருந்ததால் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஹீரோமோட்டோ கார்ப், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இந்த் பேங்க், ஸ்டேட் வங்கி, வேதாந்தா, மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 23 நிறுவன பங்குகளின் வலை உயர்ந்தது. இருப்பினும், டெக்மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, யெஸ் வங்கி, டி.சி.எஸ். உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,243 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,195 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில், 158 நிறுவன பங்குகளின் விலை எந்தவிதமாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.98 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.147.04 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 266.07  புள்ளிகள் உயர்ந்து 38,823.11 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 84 புள்ளிகள் அதிகரித்து 11,582.90 புள்ளிகளில் முடிவுற்றது.