நின்று விளையாடாததால் தோனியை அசிங்கப்படுத்திய கோலி..! வைரலாகும் வீடியோ

 

நின்று விளையாடாததால் தோனியை அசிங்கப்படுத்திய கோலி..! வைரலாகும் வீடியோ

தோனியை மதிக்காமல் கேப்டன் விராட் கோலி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தோனியை மதிக்காமல் கேப்டன் விராட் கோலி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 

இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

 

தல pic.twitter.com/sdkvRWRvyd

— King’XCI (@Kingtweetzs) July 10, 2019

இதனையடுத்து நேற்று நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து இன்று போட்டி மீண்டும் தொடங்கியது. இதில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் 74 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்திருந்தனர்.  240 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோர்  ஒரே ரன்னில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர். தோனி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோற்றுப்போனது

பொதுவாக இந்திய அணியில் கிரவுண்டில் வந்து முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அது தோனியிடமும் ஒரு ஆலோசனைக்கு உள்ளாகும், முன்னாள் கேப்டன், மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர் என்ற முறையில் இது நடப்பது வழக்கம்.  ஆனால் நேற்று ஹார்திக் பாண்டிய பந்தில் டிஆர்எஸ்சிற்காக நடந்த டிஸ்கஷனில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஹார்தீக் பாண்டியாவுடன் கூட்டாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது  அந்த டிஸ்கஷனில் கலந்து கொள்ளாமல் அந்த பக்கம் வழியாக தோனி நடந்து சென்ற வீடியோவும், அவரை மதிக்காமல் இவர்கள் பேசிக்கொண்டிருந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.