நினைத்ததை சாதிக்கும் முகேஷ் அம்பானி! 32.29 கோடி மொபைல் இணைப்புகளுடன் ஜியோ 2வது இடம்

 

நினைத்ததை சாதிக்கும் முகேஷ் அம்பானி! 32.29 கோடி மொபைல் இணைப்புகளுடன் ஜியோ 2வது இடம்

அதிக மொபைல் இணைப்புகள் கொண்ட 2வது பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. கடந்த மே இறுதி நிலவரப்படி, ஜியோ 32.29 கோடி மொபைல் இணைப்புகளை வழங்கியுள்ளது.

ஆசியாவின் மெகா கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி 2016ல் தனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாயிலாக தொலைத்தொடர்பு சேவையில் களம் இறங்கினார். இலவச வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகளால் குறைந்த காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது ஜியோ நிறுவனம். மேலும் ஜியோவின் வருகை பல தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வந்த பல நிறுவனங்களை மூட செய்தது.

வோடா போன் ஐடியா

தற்போது ரிலையன்ஸ் ஜியோ, அதிக இணைப்புகளை கொண்ட 2வது பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.  டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த மே மாத இறுதி நிலவரப்படி, மொபைல் இணைப்புகள் அடிப்படையில், வோடா போன் -ஐடியா நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் 38.75 கோடி இணைப்புகளை கொண்டுள்ளது. ஜியோ நிறுவனம் மொத்தம் 32.29 கோடி இணைப்புகளை வழங்கி 2வது இடத்தில் உள்ளது. 

மொபைல் இணைப்பு

தொலைத்தொடர்பு துறையில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஏா்டெல் நிறுவனம் தற்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 32.18 கோடி பேர் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.