நினைச்சது ஒன்னு நடந்தது வேறு! எச்.டி.எப்.சி. நிறுவனம் செம ஹேப்பி!

 

நினைச்சது ஒன்னு நடந்தது வேறு! எச்.டி.எப்.சி. நிறுவனம் செம ஹேப்பி!

நம் நாட்டின் மிகப்பெரிய அடமான கடன் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,962 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 61 சதவீதம் அதிகமாகும்.

தனியாருக்கு சொந்தமான எச்.டி.எப்.சி. நிறுவனம் அடமான கடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது. அந்நிறுவனத்தின் நிகர லாபம் நிபுணர்களின் கணிப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது. எச்.டி.எப்.சி. நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,962 கோடி ஈட்டியுள்ளது. 

வட்டி வருவாய்

2019 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் வட்டி வருவாய் அதிகரித்தது மற்றும் துணை நிறுவனங்கள் வாயிலான டிவிடெண்ட் கூடுதலாக கிடைத்தது போன்றவற்றால் நிகர லாபம் அதிகரித்துள்ளது. 2018 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,467 கோடி மட்டுமே சம்பாதித்து இருந்தது. 

செலவுகள் குறைவு

இந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.10,478.33 கோடியாக உயர்ந்துள்ளது. எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் லாபம் உயர்ந்தற்கு செலவினம் குறைந்ததும் ஒரு காரணம். கடந்த செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் மொத்தம் ரூ.568 கோடி அளவுக்கே செலவுகளை மேற்கொண்டது. 2018 செப்டம்பர் காலாண்டில் எச்.டி.எப்.சி. நிறுவனம் மொத்தம் ரூ.1,022 கோடிக்கு செலவுகள் செய்து இருந்தது.