நித்தி அங்கேதான் இருக்கிறார்… ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

 

நித்தி அங்கேதான் இருக்கிறார்… ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

பிரபல சாமியார் நித்தியானந்தா இருக்குமிடம் பற்றி இங்கிலாந்துக்கான ஈக்வடார் நாட்டுத் தூதர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஹைதி நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
இளம் பெண்களை கடத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது என்று பிரபல சாமியார் நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்று போலீசார் தேடி வருகின்றனர். அவருடைய பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முடியாது என்று நினைத்தோம் என்று இந்திய வெளியுறவுத் துறை கூறியது. அவர் தற்போது ஈக்வடார் அருகே தீவு ஒன்றை வாங்கி தனி நாடு அமைக்க முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

nithyananda

மேலும், நித்தியானந்தாவும் தினமும் புதுப்புது வீடியோ வெளியிட்டு, “நான் பரதேசி, நான் பரமசிவன், எந்த முட்டாள் நீதிமன்றத்தாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது” என்று எல்லாம் பேசி வருகிறார். அரசு நினைத்தால் அவரை எளிதில் கைது செய்ய முடியும்… ஆனாலும் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், நித்தியானந்தா இருப்பிடம் குறித்து இங்கிலாந்துக்கான ஈக்வடார் தூதர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், “நித்தியானந்தா 2018 ஜூலை 5ம் தேதி சுற்றுலா விசாவில் ஈக்வடார் வந்தார். அங்கே அவர் தன்னை ஒரு அகதியாக பதிவு செய்து, அடைக்கலம் தர வேண்டும் என்று விண்ணப்பித்தார். அவருடைய விண்ணப்பத்தை தீவிரமாக பரிசீலித்து அந்த கோரிக்கை உகந்தது இல்லை என்று தள்ளுபடி செய்தோம். அதை எதிர்த்து அவர் ஈக்வடார் நீதிமன்றத்தை நாடினார். அங்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்வடார் நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் அங்கிருந்து ஹைதி நாட்டுக்கு சென்றார்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தி கார்டியன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகி உள்ளது.

nithiyananda

நித்தியானந்தா பல மாதங்களுக்கு முன்பே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்று பியூஷ் உள்ளிட்டவர்கள் கூறிவந்தார். இந்தியாவில்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க எம்சி ஸ்கொயர், பிடதியில் சூர்யோதயம் பற்றி பொய் சொல்லி வந்தார் என்று கூறப்பட்டது. ஈக்வடார் நாட்டு தூதரின் அறிக்கையைப் பார்க்கும்போது இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் உண்மைதானோ என்று நம்பத் தோன்றுகிறது.