நித்தியானந்தா எங்கே..? தீவுக்குள் அதிசயம் ஏற்படுத்த முயற்சி… அதிரவைக்கும் பாண்டேவின் பதில்! 

 

நித்தியானந்தா எங்கே..? தீவுக்குள் அதிசயம் ஏற்படுத்த முயற்சி… அதிரவைக்கும் பாண்டேவின் பதில்! 

சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத நித்தியானந்தா மீது கடத்தல், பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தவண்ணம் உள்ளன. 

சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத நித்தியானந்தா மீது கடத்தல், பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தவண்ணம் உள்ளன. 

நித்தியானந்தா

பாண்டே  அவருடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “நித்தியானந்தா என்மீது மிகுந்த பற்றும் அன்பும் கொண்டவர். நித்தியானந்தா ஆசிரமத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிஜமாகவே சக்திகள் உள்ளது. அதுமட்டுமின்றி நித்தியானந்தாவிற்கும் மாபெரும் சக்தி இருக்கிறது. நித்தியானந்தாவை முதன்முதலில் சர்ச்சைக்குள் சிக்கவைத்த லெனின் கருப்பனும் தையும் மாற்றக்கூடிய சக்தி நித்தியானந்தாவிற்கு உண்டு எனதெரிவித்தார். நித்தியானந்தாவுக்கு சொந்தமான குருக்குலங்களும், ஆசிரமங்களும் குஜராத், வாரணவாசி, திருவண்ணாமலை, பெங்களூரு போன்ற இடங்களில் உள்ளன. நித்தியானந்தா ஆசிரமத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குருக்கள் அடிக்காமல் பிற சீடர்களை வைத்தே அடிக்கக்கூடிய செயல்களும் அங்கு அரங்கேறிவருகிறது.

 

 

குஜராத்திலுள்ள அவரது குழந்தைகளை பார்க்கவில்லை என்று நித்தியானந்தாவின் வித்தேஷ்வரா குற்றச்சாட்டினார். அதன்பிறகு போராட்டத்திற்கு பிறகு மீட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது பெண்கள் எங்களை யாரும் துன்புறுத்தவில்லை என தெரிவித்தார். அதன்பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு ஆசிரமத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு வீடியோவை வெளியிட்டார். அனைத்து ஆசிரமத்திலும் இதுபோன்று சர்ச்சைகள் இருப்பது சகஜம்தான். ஆனால் நித்தியானந்தா தற்போது ஈகுவடார் நாட்டிற்கு அருகிலுள்ள ஒரு குட்டித்தீவை வாங்கியிருக்கிறார். அந்த தீவிற்கு கைலாஷ் என பெயரிட்டுள்ளதாகவும், அதை பரிபூரண இந்து நாடாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார். அந்த தீவில் 100 பேர் மட்டும் வசிப்பதாகவும், அவர்கள் அனைவரும் நித்தியானந்தாவின் சீடர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனி நாடாக அறிவிக்க ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு சபைகளில் அதற்கான அனுமதியை வாங்க முயற்சித்துவருகின்றனர். நித்தியானந்தாவிற்கு இந்தியாவிற்குள்  தற்போது எந்த தொடர்பும் இல்லை. அவர் நேபாளம் வழியாக ஈகுவடார் தப்பிச்சென்றுள்ளார். ஆனால் அவர் தினமும் பக்தர்களை பாற்று யூடியூபில் பிரசங்கம் செய்துவருகிறார்” எனக்கூறியுள்ளார்.