நித்தியானந்தாவுக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பிப்பு!

 

நித்தியானந்தாவுக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பிப்பு!

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது.

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை நம்பி தனக்கு பதவி எல்லாம் வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் வீடியோ வெளியிட்டனர். ஆனால், தனித் தீவு எல்லாம் வாங்கவில்லை என்றும் அகதியாகக் கூட அவரை ஏற்க முடியாது என்றும் சில நாடுகள் தெரிவித்தன. சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். 

Nithyananda

இந்நிலையில் நித்தியானந்தா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அவரது பெண் சீடர் ஒருவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கும் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்காததால் கைது செய்யமுடியவில்லை என நீதிமன்றத்தில் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அளித்த ஜாமினை ரத்து செய்த நீதிமன்றம், நித்தியானந்தாவுக்கு எதிராக தேடுதல் வாரண்ட் பிறப்பித்துள்ளது.