நிதி நெருக்கடியை காட்டி உயிர் பலி வாங்கிய தனியார் மருத்துவமனை வழக்கை கைவிடும் தமிழக அரசு!

 

நிதி நெருக்கடியை காட்டி உயிர் பலி வாங்கிய தனியார் மருத்துவமனை வழக்கை கைவிடும் தமிழக அரசு!

பொருளாதார நெருக்கடி நிலையை காரணம் காட்டி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் முறைகேடு செய்த தனியார் மருத்துவமனை மீதான வழக்கை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலையை காரணம் காட்டி விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் முறைகேடு செய்த தனியார் மருத்துவமனை மீதான வழக்கை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சென்னை பெரும்பாக்கத்தில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு சர்வதேச நோயாளிகள் பலரும் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். குறிப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கையே அதிகம். அப்படி வருபவர்களுக்கு இதயம், கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை எந்த தொய்வுமின்றி நடந்து வந்தது. இந்த நிலையில், விழுப்புரத்தில் விபத்தில் சிக்கிய ஒருவரை வலுக்கட்டாயமாக குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் எழுந்தது.

108-ambulance-8

கேரளாவைச் சேர்ந்த அவர்கள், தங்களுக்கு விருப்பமின்றி அந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், திடீரென்று மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று அறிவித்து, அவர் உடலில் இருந்து உறுப்புக்களை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அவசரம் காட்டியதாகவும் அந்த நபரின் உறவினர்கள் கேரள அரசிடம் புகார் அளித்தனர். கேரள அரசு நிர்பந்தம் காரணமாக தனியார் மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. நோயாளிகளை கைப்பற்றுவதற்காக மருத்துவமனை நிர்வாகம் செய்த மோசடிகள் பற்றி செய்தி வெளியாகின. 

இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. இதனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யாமல் உள்ளது. இந்த வழக்கை கைவிட்டால் மத்திய அரசிடம் பேசி நிதி உதவி பெற்றுத் தருவதாக பா.ஜ.க மேலிட நிர்வாகிகள் சிலர் தமிழக அரசுக்கு ஆசைகாட்டியுள்ளனர். இதனால், தனியார் மருத்துவமனை மீதான உயிரைப் பறிக்கும் ஊழல் புகாரை கைவிட தமிழக அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், தமிழக அரசு மீது தி.மு.க கூறும் ஊழல் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.