நிதி நிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடி! – நாகர்கோவிலில் மக்கள் போராட்டம்

 

நிதி நிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடி! – நாகர்கோவிலில் மக்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி 300க்கும் மேற்பட்டோர்களிடம் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெட்டூணிமடத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி 300க்கும் மேற்பட்டோர்களிடம் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வெட்டூணிமடத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. திருவிதாங்கோட்டைச் சேர்ந்த செய்யது அலி, ரமேஷ், ஜெயச்சந்திரன், ராஜன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். பல கவர்ச்சிகரமான வட்டி திட்டங்களை அறிவித்து ரூ.300 முதல் பல ஆயிரம் வரை மக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிறுவனம் என்பதால் மக்களும் தங்கள் சேமிப்புகளை எல்லாம் இந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தும் பணத்தைத் திருப்பித்தராமல் பலரையும் இந்த நிதி நிறுவனம் ஏமாற்றி வந்துள்ளது. பணம் கொடுத்தவர்கள் வந்து முற்றுகையிட்டதும் நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து இந்த நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்த 300-க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 5000 பேருக்கு மேல் இந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்துள்ளோம். எங்கள் பணத்தை மீட்டுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.