நிச்சயதார்த்தம் பற்றி இன்ஸ்டாகிராமில் அறிவித்த மகள் – பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவியின் ரிப்ளை

 

நிச்சயதார்த்தம் பற்றி இன்ஸ்டாகிராமில் அறிவித்த மகள் – பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவியின் ரிப்ளை

நிச்சயதார்த்தம் குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்த மகளுக்கு பில் கேட்ஸும் அவரது மனைவியும் பதில் அளித்துள்ளனர்.

வாஷிங்டன்: நிச்சயதார்த்தம் குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்த மகளுக்கு பில் கேட்ஸும் அவரது மனைவியும் பதில் அளித்துள்ளனர்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் மகள் ஜெனிபர் கேத்தரின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நயல் நாசர் என்பவருடன் டேட்டிங் சென்றார். முஸ்லீம் மதத்தை சேர்ந்த நாசரும் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும் இந்தாண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்ற வீரராக எகிப்து நாட்டு சார்பாக நாசர் கலந்து கொள்ள உள்ளார். நயல் நாசர் அமெரிக்காவின் சிகாக்கோவில் பிறந்து குவைத்தில் வளர்த்தவர்.

இந்த நிலையில், இந்த காதல் ஜோடி நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பில்கேட்ஸ் மகள் ஜெனிபர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் நாசருடனான காதல் குறித்து உருகி, உருகி பேசியுள்ளார்.  இதற்கு பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவியும் பதில் அளித்துள்ளனர். “என் உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது. வாழ்த்துகள்!” என்று பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளார். அதேபோல பில்கேட்ஸ் மனைவி மெலிண்டாவும் “உன்னையும் நாசரையும் நினைத்து சிலிர்த்து போய்விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.