நிசாமுதின் காலில் விழுந்த மோடி, மதச்சார்பற்ற கட்சியா பாஜக?!..

 

நிசாமுதின் காலில் விழுந்த மோடி, மதச்சார்பற்ற கட்சியா பாஜக?!..

நேதாஜியின் நெருங்கிய நண்பராகவும் பாதுகாவலராகவும், வாகன ஓட்டுநராகவும் இருந்தவர் நிசாமுதின்

சுபாஷ் சந்திரபோஸின் ஆசாத் ஹிந்த் ஃபவுச் இயக்கத்தின் படைத்தலைவராக செயல்பட்டவர் நிசாமுதின். 107 வயதாகும் நிசாமுதினுக்கு சமீபத்தில்தான் சுதந்திர போராட்ட தியாகி எனும் அங்கீகாரம் கிடைத்தது. நேதாஜியின் நெருங்கிய நண்பராகவும் பாதுகாவலராகவும், வாகன ஓட்டுநராகவும் இருந்தவர் நிசாமுதின். ஐஏஎஸ் அதிகாரி பிரஞ்சல் யாதவ் எடுத்த முயற்சியால்தான் நிசாமுதினுக்கு சுதந்திர போராட்ட தியாகி எனும் அங்கீகாரம் கிடைத்தது.

பிரஞ்சல் யாதவ்

pranjal yadav

பிரஞ்சல் யாதவ், வாரணாசியில் மோடியின் பேரணி ஒன்றுக்கு மறுப்புக்கு தெரிவித்ததன் மூலம் பாஜக எதிர்ப்பையும், மக்களின் ஆதரவையும் பெற்றவர். இவரது விடா முயற்சியால்தான் நிசாமுதினுக்கு சுதந்திர போராட்ட தியாகி எனும் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால், நிசாமுதின் ஊடகங்களின் பார்வையில் பட காரணம் மோடி. வாரணாசியில் நடைபெற்ற விழாவில் நிசாமுதின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் மோடி. இந்த சம்பவம் நடந்தது, 2014-ஆம் ஆண்டு மே மாதம்.

சுதந்திர போராட்ட தியாகி நிசாமுதின் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர். மோடி மதச்சார்பற்றவர், இஸ்லாமியரின் காலில் விழுந்து வணங்குகிறார் என அப்போது இந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டது. இதனால் அவருக்கு வாக்கு வங்கியில் எதுவும் பெரிய லாபம் இல்லை. ஏனென்றால் தேர்தல் அப்போது கிட்டத்தட்ட முடிந்திருந்தது. 

modi

ஆனால் மதச்சார்பற்றவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட மோடி, இஸ்லாமியர்களின் தொப்பியை அணிய மறுத்தார், பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் விரும்பி உண்ணும் மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்க கோரினார். பசுக்காவலர்களால் இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்ட போது சரியான நடவடிக்கை எடுக்காமல் கள்ள மவுனம் சாதித்தார்.

pulwama

புல்வாமா தாக்குதலை வைத்து மோடி அரசியல் செய்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் மனோஜ் திவாரி இராணுவ உடை அணிந்து பிரச்சாரம் செய்தது இந்த விமர்சனத்துக்கு முக்கிய காரணம். இந்தமுறை யார் காலில் விழுந்தாவது அதிகாரத்தை பிடித்துவிட வேண்டும் என பாஜக தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தமுறை மோடி வெற்றிபெற்றால், அடுத்து தேர்தல் நடக்காது என பாஜக தலைவர் ஷாக்சி மஹராஜ் குறிப்பிட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.