நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வெட்கமே இல்லாமல் காசு கேட்டேன்: நடிகர் விஷால் ஓபன் டாக்!

 

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வெட்கமே இல்லாமல் காசு கேட்டேன்: நடிகர் விஷால் ஓபன் டாக்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பிச்சை எடுக்கவும் தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பிச்சை எடுக்கவும் தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆயிஷா வில்சன்ஸ் நோயினால்பாதிக்கப்பட்டார். அவரது நோயைக் குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். சிறுமி ஆயிஷா பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சமூக வலைதளங்கள் மூலம் அவரின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டப்பட்டது. இதனையடுத்து ஆயிஷாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 8 வயதான ஆயிஷாவுக்கு சுமார் 8 மணி நேர தொடர் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு ஆயிஷா நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

vishal

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஷால், ‘இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த போது நான் வெட்கமே இல்லாமல் காசு கேட்டேன். அதன் பிறகு தான் என் நண்பன் என்னிடம், அந்த குழந்தையை காப்பாற்றப் பலர் பேர் உதவி செய்துள்ளார்கள் என்று கூறினான். இதே போன்று ஆதரவற்ற குழந்தைகளை அரவணைக்கவும், உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கவும் அனைவரும் முன்வரவேண்டும்.  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.

vishal

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிக நிவாரணம் என்பது மட்டும் முக்கியம் இல்லை. முடிந்தவரை அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நாம் அனைவரும் உதவ வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நோயால் அவதிப்படும் மக்களுக்கும் உதவ  உதவி செய்ய பிச்சையெடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்