நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான பிட்லை

 

நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான பிட்லை

தமிழகத்தில் நாஞ்சில் நாடு, கேரள பாலக்காடு பகுதியில் பிரபலமான பிட்லை செய்முறையைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் நாஞ்சில் நாடு, கேரள பாலக்காடு பகுதியில் பிரபலமான பிட்லை செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் – 150 கிராம்
துவரம் பருப்பு – கால் ஆழாக்கு
கொண்டைக் கடலை – 1 கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 1
சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
சீரகம் – 1 ஸ்பூன்
தேங்காய்த்தூள் – 4 ஸ்பூன்
கடுகு – சிறிது
வெல்லம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு கரண்டி
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே  ஊறவைக்கவும்.  8 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.

துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்து மசித்து வைக்கவும்.  புளியை வெந்நீரில் கொதிக்கவிட்டு நன்றாகக் கரைக்கவும்.  ஊறவைத்த கொண்டைக்கடலை, உப்பு, சாம்பார் பொடி போட்டு அடுப்பில் கொதிக்கவிடவும். 
கொதிக்க ஆரம்பித்ததும் நறுக்கிய பாகல் துண்டுகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம், பெருங்காயம் இவற்றைப் பொன்னிறமாக வறுத்து 2 ஸ்பூன் தேங்காய்த் தூளைச் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். 
அரைத்த விழுதுடன் வெந்த பருப்பைப் போட்டுக் கலந்து கொதிக்கும் குழம்பில் போடவும்.  வெல்லம் சிறிது அளவு போடவும்.  5 நிமிடங்களில் குழம்பு சேர்ந்தாற்போல் ஆகிவிடும். 

கீழே இறக்கி வைத்து கடுகு தாளித்து, மீதி இருக்கும் 2 ஸ்பூன் தேங்காய்த் துருவலை இளஞ்சிவப்பாக வறுத்துப் போடவும். கொத்தமல்லி கிள்ளிப் போட்டு மூடிவைக்கவும்.

சேனை, பூசணிக்காய் இருப்பின் முதலில் கொதிக்கும் நீரில் தானைப் போட்டு லேசாக வெந்ததும் ( 5 நிமிடங்கள்) புளிஜலத்தை விடவும்.  மற்றவை பாகல் பிட்லையைப் போல்தான்.  நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போடலாம் (அ) வறுத்த பொருட்களுடன் அரைத்தும் விடலாம்.

பாகற்காய், சேனைக்கிழங்கு, பூசணி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளில் பிட்லை செய்யலாம்.