நாள் முழுவதும் சுறுசுறுப்பைத் தரும் சூர்ய நமஸ்காரம் 

 

நாள் முழுவதும் சுறுசுறுப்பைத் தரும் சூர்ய நமஸ்காரம் 

ஆதி தமிழர்களிடத்திலேயே சூரியனைக் கடவுளாக வழிபட்டு வந்த வரலாறு நம்முடையது. நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே சூரியனை வணங்கும் பாரம்பரியம் நம்மிடையே உண்டு. யோகாவில் இதை சூர்ய நமஸ்காரம் என அழைக்கிறோம். யோக கலையில் மூச்சு, உடல், மனம் , தியானம், மந்திரம் என பல படிகள் இருந்தாலும், ஒரு நிறைவான உடற்பயிற்சியாகவே சூர்ய நமஸ்காரம்  நம்பப்பட்டு வருகிறது.

ஆதி தமிழர்களிடத்திலேயே சூரியனைக் கடவுளாக வழிபட்டு வந்த வரலாறு நம்முடையது. நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே சூரியனை வணங்கும் பாரம்பரியம் நம்மிடையே உண்டு. யோகாவில் இதை சூர்ய நமஸ்காரம் என அழைக்கிறோம். யோக கலையில் மூச்சு, உடல், மனம் , தியானம், மந்திரம் என பல படிகள் இருந்தாலும், ஒரு நிறைவான உடற்பயிற்சியாகவே சூர்ய நமஸ்காரம்  நம்பப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி தினசரி செய்ய இயலாதவர்கள் தினமும் ஐந்து நிமிடங்கள் சூர்ய நமஸ்காரத்தை முழுமையாக செய்தாலே போதுமானது.
சூர்ய நமஸ்காரம் எப்படி செய்வது?

suriyanamskaram

சூர்ய நமஸ்காரத்தில் 12 படி நிலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இந்த 12 நிலை நமஸ்காரங்களையும் செய்வதற்கு மொத்தமே 10 நிமிடங்களுக்குள் தான் தேவைப்படும்.

1

1. பிராணமாசனம்
கால்களை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்த படி நிற்கவும். இரண்டு கைகளையும் ஒன்றாக தலைக்கு மேலே கொண்டு செல்லவும். மேலிருந்து கீழாக மார்புக்கு நேராக கொண்டு வரும் போது மூச்சை உள்ளிழுக்கவும். மீண்டும் கைகளை மேலே எடுத்து சென்று கீழே இறக்கும் போது மூச்சை வெளியிடவேண்டும். இதுவே முதல் படிநிலை.

2

2. அஸ்ட உட்டனாசனம் :
மூச்சை உள்ளே இழுத்தபடியே கைகளை மேலே கொண்டு செல்கையில் கைகள் காதுகளை உரசிய படி இருக்கட்டும். மெதுவாகக் கைகளை பின்புறம் வளைத்து அதற்கேற்ற படி  தயையும் லேசாக சாய்க்கவும்.மீண்டும் மூச்சை உள் இழுக்கவும்.

3

3. அஸ்டபாதாசனம்
மூச்சை வெளியே விட்டபடியே மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பி, கைகளை கால்களுக்கு இணையாக தரையை தொடுமாறு வைக்கவும். தலை, கால் முட்டியை தொட்டபடியே இருக்க வேண்டும். ஒரு சில நொடிகள் இதே நிலையில் மூச்சை வெளியிடுதல் வேண்டும்.

4

4. ஏகபாத பிரஸ்ர்நாசனம்
மூச்சை உள்ளே இழுத்த படியே வலது காலை பின்னோக்கி நகர்த்த வேண்டும். அதே நேரம் இரு கைகளையும் இடது காலுக்கு சமமாக ஊன்ற வேண்டும். தலையை மேல் நோக்கி பார்க்கவேண்டும். மறுபடியும் மூச்சை உள்ளிழுத்த படியே சில நொடிகள் இருத்தல் வேண்டும்.

5

5. தந்தாசனம்
மூச்சை வெளியே விட்டபடியே பின்னால் இருக்கும் வலது காலுக்கு சமமாக இடது காலையும் நகர்த்த வேண்டும். இடுப்பு நன்றாக நீட்டி முடிந்த அளவு உயரமாக வைக்கவேண்டும். வளைவுத் தூண் போல் உடலமைப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியிட்ட படியே சில நொடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும்.

6

6. அஷ்டாங்க நமஸ்காரம்.
மறுபடியும் மூச்சை உள்ளே இழுத்தபடியே உடல் தரையை தொடுமாறு வைக்க வேண்டும். கால்கள், முட்டி, கைகள், மார்பு ,நெற்றி  அனைத்தும் தரையில் படுமாறு வைக்கவேண்டும். இப்போது தற்காலிகமாக மூச்சை சில நொடிகள் நிறுத்தி வைத்தல் வேண்டும். 

7

7. புஜங்காசனம்
மூச்சை உள்ளே இழுத்த படியே தலையை பின்புறமாக நீட்டவேண்டும். முதுகை முடிந்த அளவில் பின் பக்கமாக வளைக்கவேண்டும். சில நொடிகள் மூச்சை உள் இழுத்து அதே நிலையில் இருக்க வேண்டும். 

8

 8. அதோ முக்கா ஸ்வானாசனம்
மூச்சை வெளியே விட்டபடியே மெதுவாக இரு கைகளையும் உயர்த்தவேண்டும். அதற்கேற்ற படியே இடுப்பு, தலையை உயர்த்தி மறுபடியும் வளைவுத்தூண் அமைப்பில் சிறிது நேரம் மூச்சை வெளியிட வேண்டும். சில நொடிகள் அதே நிலையில் இருத்தல் வேண்டும். 

9

9. ஆஷ்வா சஞ்சலனாசனம்
மெதுவாக மூச்சை உள் இழுத்தபடியே வலது காலை ஒரு அடிக்கு முன்னால் முட்டியை மடக்கி வைக்கவேண்டும். தலையை மேலே மெதுவாக உயர்த்தி கைகளை நேராக வைக்கவேண்டும். மூச்சை உள்ளிழுத்து அதே நிலையில் சில நொடிகள் இருக்க வேண்டும். 

10

10. உட்டனாசனம் 
வெளியே மூச்சை விட்டபடியே, வலது காலுக்கு சமமாக இடதுகாலையும் மடக்கியபடி கொண்டு வரவேண்டும். தலை முட்டியை தொட்டபடியே இருக்கவேண்டும். மூச்சை மெதுவாக வெளியிட்ட படி அதே நிலையில் சில நொடிகள் இருக்க வேண்டும்.

11

11. அஸ்ட உட்டனாசனம் 
மூச்சை உள் இழுத்தபடியே மெதுவாக கைகளை உயர்த்த வேண்டும். பின்புறமாக வளைந்து கைகளை பார்த்தபடியே தலை இருக்கவேண்டும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்த படியே அதே நிலையில் சில நொடிகள் இருத்தல் வேண்டும். 

12

12. பிராணமாசனம் 
தொடக்க நிலையிலேயே மறுபடியும் வணக்கம் செய்யும் நிலைக்கு வரவேண்டும். மூச்சை நன்றாக வெளியிடுதல்…
இவை அனைத்து படி நிலைகளையும் செய்து முடித்த பின்னர் சாதாரண நிலைக்கு வரவேண்டும்.

இந்த சூர்ய நமஸ்காரத்தை  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் நாள்தோறும் செய்யலாம். செலவில்லாமல், கருவிகளின் உதவியின்றி 4 சதுரமீட்டர் இடத்திலேயே செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடமாகத் தேர்வு செய்துக் கொள்ளுங்கள்.  தினசரி செய்யச் செய்ய உடலும் மனமும் புத்துணர்வு பெறும் . 
சூர்ய நமஸ்காரம் செய்வதற்கு காலை நேரமே உகந்தது. இயலாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பாட்டிற்குப் பின் 2 மணிநேரம் இடைவெளியில்  செய்ய வேண்டும்.
இடுப்பு எலும்பில் பிரச்சனை உள்ளவர்களும் , முதுகுப் பிரச்சனை உள்ளவர்களும் , கர்ப்பிணிகளும் தகுந்த ஆலோசனையின் பேரில் தொடரலாம்.