நாளொன்றுக்கு 89 பாலியல் வன்கொடுமை அரங்கேறுகிறது – ஆய்வில் தகவல்!!  

 

நாளொன்றுக்கு 89 பாலியல் வன்கொடுமை அரங்கேறுகிறது – ஆய்வில் தகவல்!!  

நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 8‌9 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்கின்றன, அதில் 94 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் தெரிந்தவர்களாலேயே செய்யப்படுவது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. 

நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 8‌9 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்கின்றன, அதில் 94 சதவிகித பாலியல் வன்கொடுமைகள் தெரிந்தவர்களாலேயே செய்யப்படுவது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. 

2018ஆம் ஆண்டு நாட்டில் நிகழ்ந்த குற்றச்சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. 2018ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 33 ஆயிரத்து 356 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 89 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 72.2 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 27.8 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

rape

அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில்  5ஆயிரத்து 433 வழக்குகளும், ராஜஸ்தானில் 4ஆயிரத்து335 வழக்குகளும் , உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 946 வழக்குகளும் பதிவாகியுள்ளன, மகாராஷ்ட்ராவில் 2 ஆயிரத்து 142 வழக்குகள், சத்தீஸ்கரில் 2,091 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஆயிரத்து 945 வழக்குகளும் , தலைநகர் டெல்லியில் ஆயிரத்து,215 வழக்குகளும் பதிவாகியுள்ளன.  

தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு 331 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு பதிவான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 94 சதவிகித சம்பவங்கள் தெரிந்தவர்களாலே நிகழ்த்தப்பட்டிருப்பது நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.  மொத்தம் பதிவான 33ஆயிரத்து 356 வழக்குகளில் 15ஆயிரத்து 972 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குடும்ப நண்பர்கள், பக்கத்து வீட்டில் வசிப்போர் , பணிக்கு அமர்த்தியவர் அல்லது நன்கு பரிச்சயமானவராகவே இருக்கின்றனர்.

rape

12ஆயிரத்து568 வழக்குகளில் குற்றம்சாட்டப்பவர்கள் நண்பர்கள், ஆன்லைன் நண்பர்களாக இருக்கின்றனர். 2ஆயிரத்து 780 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே நிகழ்த்தப்பட்டிருப்பதும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தில் வெளி வந்திருக்கும் மற்றொரு அதிர்ச்சித் தகவலாகும்