நாளொன்றுக்கு 150கிமீ.. சைக்கிளிலேயே சிங்கப்பூர் வரை சென்று சாதித்துக்காட்டிய இளைஞர்!

நாளொன்றுக்கு 150கிமீ.. சைக்கிளிலேயே சிங்கப்பூர் வரை சென்று சாதித்துக்காட்டிய இளைஞர்!

நாளொன்றுக்கு 150 கிலோ மீட்டர் என சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து சைக்கிளிலேயே சிங்கப்பூரை சென்று அடைந்திருக்கிறார் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இவரின் இந்த வியக்க வைக்கும் புதிய முயற்சியை தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகுதியை சேர்ந்தவர் ஹிம்மன்ஷு. இவர் டெல்லியில் சார்ட்டட் அக்கவுண்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் நாளொன்றிற்கு சுமார் 150 கிலோ மீட்டர்கள் வரை சாதாரண சைக்கிளிலேயே பயணம் செய்து பல நாடுகளை கடந்து சில இன்னல்களையும் சந்தித்த பிறகு சிங்கப்பூர் நாட்டை அடைந்திருக்கிறார். இதற்காக இவர் சுமார் 1000 கிலோ மீட்டருக்கும் மேலாக பயணம் செய்திருக்கிறார்.

travel

சிங்கப்பூர் நாட்டை சைக்கிளிலேயே சென்றடையும் முயற்சிக்கு முன்னதாக, பயிற்சிக்காக ஆறுநாட்கள் சைக்கிளிலேயே ராஞ்சியிலிருந்து இருந்து லடாக் பகுதிக்கு சென்றிருக்கிறார். லடாக் பகுதிக்கு செல்லும் வழியில் சாலைகள் மோசமாக இருந்ததால் அதிலிருந்து பல அனுபவங்கள் கிடைத்தது என நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சைக்கிளில் பயணிக்கும் பொழுது அதிகமான அளவில் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்பதால், பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து சென்றிருக்கிறார். அவருடன் காற்றடிக்கும் பம்ப், பஞ்சர் பொருட்கள். முதலுதவிப் பெட்டி, கொஞ்சம் துணிகள், தண்ணீர் பாட்டில், ஃபோன், ஸ்லீபிங் பேக் மற்றும் கூடாரம் அமைக்கும் பேக். இவற்றை மட்டுமே உடன் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த பயணத்தின்போது திரிபுரா, அஸ்ஸாம், மணிபூர் ஆகிய இந்திய மாநிலங்களையும், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, மலேசியா ஆகிய சர்வதேச எல்லை பகுதிகளையும் கடந்த பின்னரே சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார். 

travel

செல்லும் வழியில் அசாம் பகுதியில் இவரது சைக்கிள் மீது சிறியரக டிரக் மோதியதால் கீழே விழுந்து தோள்பட்டையில் அடி பட்டதாகவும், மலேசியாவில் உள்ளூர் இளைஞர்கள் சிலர் இவரை தாக்க முயற்சித்தபோது தப்பித்து வேறு ஒரு பகுதியில் சிறிது நேரம் மறைந்ததாகவும் கூறினார். இதுபோன்ற இன்னல்களை கடந்த பிறகே சிங்கப்பூரை என்னால் சென்றடைய முடிந்தது என நம்முடன் பகிர்ந்துள்ளார்.

இவரின் இந்த பயணம் சுமார் 55 நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளது. கையில் பெரிய அளவில் பணம் எடுத்துச் செல்லவில்லை. செல்லும் வழியில் ஆங்காங்கே இருக்கும் கிராமப்புறங்களில் உள்ளவர்களிடம் உதவி கேட்டு அவர்கள் வீட்டில் இரவு நேரங்களில் தங்கியுள்ளார். இன்னும் எளிதான வழிகளை அவர்கள் தமக்கு கூறியதாகவும் நமக்கு பகிர்ந்துள்ளார் ஹிம்மன்ஷு.

இவரின் சைக்கிள் பயணம் இத்துடன் நிற்கப்போவதில்லையாம். இதற்கு அடுத்த முயற்சியாக இந்தியாவிலிருந்து ஐரோப்பா வரை சைக்கிளிலேயே செல்ல திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்தார்.

இளைஞரின் இந்த பலே முயற்சிக்கு நம் வாழ்த்துக்கள்.