நாளை வெளியாகிறது தனுஷின் பட்டாஸ் ட்ரைலர்! 

 

நாளை வெளியாகிறது தனுஷின் பட்டாஸ் ட்ரைலர்! 

தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையடுத்து கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். புதுப்பேட்டைப் படத்திற்குப் பிறகு தனுஷ், சினேகா இணைந்து நடித்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் சில் ப்ரோ,  முரட்டு தமிழண்டா ஆகிய பாடல்களை படக்குழு வெளியிட்டது. 

 

 

பட்டாஸ் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து நாளை காலை 10.31 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து #PattasTrailerTomorrow என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.