நாளை வெளியாகிறது அஜித் – வித்யா பாலனின் ரொமான்டிக் பாடல்! 

 

நாளை வெளியாகிறது அஜித் – வித்யா பாலனின் ரொமான்டிக் பாடல்! 

அஜித் – வித்யா பாலினி ரொமான்டிக் பாடல் நாளை வெளியாகிறது. 

சென்னை: அஜித் – வித்யா பாலினி ரொமான்டிக் பாடல் நாளை வெளியாகிறது. 

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை.மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர், ட்ரைலர் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த மாதம் 8ம் தேதி ரீலிசாகவுள்ள இதில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்- வித்யா பாலனின் ரொமான்டிக் பாடலான ‘அகலாதே ‘ நாளை  மாலை  6.00 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

முன்னதாக இந்த படத்தின் ‘வானில் இருள்’, ‘தி முகம்’ போன்ற பாடல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அமோகோ வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.