நாளை விசேஷமான ஆடிக் கிருத்திகை வழிபாடு

 

நாளை விசேஷமான ஆடிக் கிருத்திகை வழிபாடு

முருகனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் விசேஷம் என்றாலும், நாளை வருகிற ஆடி கிருத்திகை (அ) கார்த்திகை கூடுதல் விசேஷமானது.

முருகனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரம் விசேஷம் என்றாலும், நாளை வருகிற ஆடி கிருத்திகை (அ) கார்த்திகை கூடுதல் விசேஷமானது.  இந்த ஆடி கிருத்திகையில் விரதமிருந்து ஆறுமுகனை வழிபட்டால் வாழ்வில் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.  சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் தாம் முருகனுக்கு உகந்த எல்லாவற்றிலுமே 6 முக்கிய பங்கு வகிக்கிறது. ‘சரவணபவ’ மந்திரத்தை ஆறு எழுத்து மந்திரம் என்கிறோம். முருகனை ‘ஆறுமுகக்கடவுளாக’ வழிபடுகிறோம். அவனது கரங்கள் ஆறு. சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.  

Murugan

நாளைய ஆடிக் கிருத்திகை, உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் அவர்களது பிரார்த்தனைக்களையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். மாதந்தோறும் குறிப்பிட்ட முருகனின் வழிப்பாட்டு தலத்திற்கு சென்று வேண்டுதல் செய்பவர்களும் இருக்கிறார்கள். அத்தனை சக்தி வாய்ந்தது இந்த கார்த்திகை விரதம்.  அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என சிறப்பாக கொண்டாடப்படும். 

செவ்வாயின் அம்சமாக கருதப்படுபவர் முருகப் பெருமான்.  அதனால், செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடைகள், செவ்வாய் தோஷ தடை, புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும். ஒவ்வொரு மாதமும் வருகிற கிருத்திகை விரதத்தை மறக்காதீங்க. அதிகாலையில் எழுந்து, நீராடி, அருகில் இருக்கும் கந்தனனின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்!