நாளை முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து கோயில்களும் மூடல்!  

நாளை முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து கோயில்களும் மூடல்!  

கொரோனா அச்சுறுத்ததால் கோயில் போன்ற பொது இடங்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. பக்தர்கள் அதிகம் கூடும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் உள்ள பக்தர்கள் வர வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

temple

இந்நிலையில் சென்னையில் வடபழனி அருள்மிகு முருகன் கோவில், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில், பழனி அருள்மிகு முருகன் திருக்கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருத்தணிஅருள்மிகு முருகன் திருக்கோவில், அருள்மிகு காமாட்சி அம்மன் திருக் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் உள்பட அதிக மக்கள் வரக் கூடிய மிகப் பெரிய திருக்கோவில்களில் நாளை முதல் 31ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் இருப்பினும் ஆகம விதிகளின்படி திருக்கோவில்களில் அனைத்து கால பூஜைகளும் எப்போதும் போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிக மக்கள் வரக்கூடிய பெரிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் தர்காக்களில் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.