நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு!

 

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு!

நாளை முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடெங்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 49 டாஸ்மாக் கடைகளில் 16 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் நாளை முதல் கூடுதலாக 13 கடைகள் சேர்த்து மொத்தம் 29 கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது.

நாளை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கூடுதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கூடுதலாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். மற்றபகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திறக்கப்படும் மதுபான கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் கையில் குடை, முகக் கவசங்கள் மற்றும் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவு படி திருவள்ளூர் மேற்கில் கூடுதலாக 83 கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது.