நாளை முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை ஆய்வு மையம் 

நாளை முதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் – வானிலை ஆய்வு மையம் 

தமிழகம் முழுவதும் கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில்  கடந்த இரு தினங்களாக,  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நாளை மட்டுமே மழை இருக்கும் என்றும் அதன்பின் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியானது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும். இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் கேரளா கர்நாடகா ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்த வானிலை ஆய்வு மையம், நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் அறிவித்துள்ளது. 

rain

குமரி கடல் பகுதி லட்சத்தீவு மாலத்தீவு பகுதி மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.