நாளை மறுநாள் வாக்குப்பதிவு; நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

 

நாளை மறுநாள் வாக்குப்பதிவு; நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்று முடிந்தது.

campaign

இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளுக்கு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது.

campaign

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 17 தொகுதிகள், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகள், ஜம்மு, காஷ்மீரில் ஒரு தொகுதி என 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வருகிற 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், நான்காம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.