நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் 

 

நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் 

நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவை

தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிடோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.