நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு

 

நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு

நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை: நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மகாவீரர் ஜெயந்தி சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.

ttn

இந்த நிலையில், நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடு, இதர பதப்படுத்திய இறைச்சி ஆகியவை அனைத்து இடங்களிலும் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.