நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!

 

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..!

போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலியோ இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இளம்பிள்ளைவாத நோயை தடுக்கும் நோக்கில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு நாடுமுழுவதும்  போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலியோ இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

 

அந்த வகையில் இந்தாண்டுக்கான  போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை  நாடு  முழுவதும்  நடைபெறவுள்ளது.   தமிழகத்தில்  முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை  நடைபெறவுள்ளது. குறிப்பாக மக்களின் சிரமங்களை குறைக்கும் நோக்கில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம், 5 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து தர திட்டமிடப்பட்டுள்ளது.

ttn

கிராமப்புறங்களில் சொட்டு மருந்து வழங்க ஆயிரம் நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ttn

மேலும்  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தவறாமல் அழைத்து வந்து பெற்றோர்  போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.