நாளை பாகிஸ்தான் ஏர்போர்ட்டில் கபீம்குபாம், கும்பிபாகம், அந்தகூபம், மிருகுன‌ஜம்போ…

 

நாளை பாகிஸ்தான் ஏர்போர்ட்டில் கபீம்குபாம், கும்பிபாகம், அந்தகூபம், மிருகுன‌ஜம்போ…

“ஜெயிச்சு கோப்பையை வாங்கிட்டு வாடான்னா, கிரவுண்ட்ல கொட்டாவி விட்டுக்கிட்டா நிக்கிற‌, வாடா இங்கே” வகை வரவேற்புக்கு சர்ஃப்ராஸ் தயார்படுத்திக்கொள்வது நல்லது. ஏர்போர்ட்ல போய் இறங்கும்போது ஹெல்மெட், அப்டாமென் கார்ட் எல்லாம் போட்டுக்கங்க பிரதர், அவ்ளோதான் சொல்லமுடியும்.

உலககோப்பை அரையிறுதியில் தகுதிபெற, இன்றைய ஆட்டத்தில் 500 அல்லது 600 ரன்கள் குவித்து, வங்கதேச அணியை ஊதித்தள்ளி, அரையிறுதியில் நுழைந்து, இந்தியாவை வென்று, இறுதி ஆட்டத்திலும் ஜெயித்து கோப்பையோடுதான் ஊருக்கு வருவோம் என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டியளித்திருந்தார் கேப்டன் சர்ஃப்ராஸ். போட்டியில் ஜெயிப்பதற்கு முன்பாக இருந்த இன்னொரு முக்கிய கண்டமான, டாஸையும் வென்றார். “ஆஹா, இன்னைக்கி இருக்குடா எல்லா ரெக்கார்டுக்கும் ஆப்பு, 500 ரன் அடிச்ச முதல் அணி என பேர் வாங்கப்போகிறது” என ரசிகர்கள் ஆசையாக டிவியை வைத்துக்கண் வாங்காமல் பார்த்திருக்க, அதிகபட்சமாக 315 ரன்களை மட்டுமே பாகிஸ்தானால் எடுக்க முடிந்தது.

Sarfraz

அரையிறுதிக்கு தகுதிபெற 500 அடிப்போம் 600 எடுப்போம்னு சொன்னதெல்லாம் பொய்யா கோப்ப்ப்பால் என ரசிகர்கள் சர்ஃப்ராஸை குடைய, ‘இப்பவும் ஒண்ணும் மோசமில்ல, வங்கதேச அணியை 7 ரன்களுக்குள் (???) சுருட்டிவிட்டால், அரையிறுதி வாய்ப்பு நமக்கு’ என வீரர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் கேப்டன்.  அந்த நம்பிக்கைக்கு வங்கதேச அணி அவர்கள் இன்னிங்க்ஸின் மூன்றாவது ஓவரிலேயே சங்கு ஊதிவிட்டது. அடுத்த நாலு வருஷத்துக்கு உலக கோப்பை மட்டுமல்ல, காபி/டீ கோப்பையை பத்திக்கூட நினைக்க முடியாத நிலை பாகிஸ்தான் அணிக்கு.

Sania Mirza

“சும்மாவே இவனுங்க நம்ம பக்கம் லைட்டை திருப்புவானுங்க, இப்ப என்ன பண்ண காத்திருக்கானுங்களோ?” என்று பக்பக் நெஞ்சோடு சானியா மிர்சா ஒருபக்கம் பதற, இறுதி ஆட்டம் வரைக்கும் முன்னேறிச் சென்று தோற்றாலே, பாகிஸ்தான் ரசிகர்கள் ஏர்போர்ட்டில் கத்தி கபடாவோடு காத்திருப்பார்கள். இப்போ முதல் ரவுண்டிலேயே அவுட்டு. “ஜெயிச்சு கோப்பையை வாங்கிட்டு வாடான்னா, கிரவுண்ட்ல கொட்டாவி விட்டுக்கிட்டா நிக்கிற‌, வாடா இங்கே” வகை வரவேற்புக்கு சர்ஃப்ராஸ் தயார்படுத்திக்கொள்வது நல்லது. ஏர்போர்ட்ல போய் இறங்கும்போது ஹெல்மெட், அப்டாமென் கார்ட் எல்லாம் போட்டுக்கங்க பிரதர், அவ்ளோதான் சொல்லமுடியும்.

Pakistan players at Airport

எனக்கு தெரிந்து பாகிஸ்தான் வீரர்கள் எல்லாரும் அடுத்த உலககோப்பை நடத்தும் நாட்டுக்கு இப்போதே போய், அங்கேயே இருந்து அடுத்த உலக கோப்பையோடு ஊருக்குள் நுழைந்தால்தான் உசுருக்கு உத்தரவாதம்! ஹலோ, என்ன? அடுத்த வேர்ல்ட் கப் இந்தியாவுலயா? ரைட்டு. வேர்ல்ட் கப் வேற ஊர்ல நடந்தாலே கோலி ஒண்ணுக்கு போற வரைக்கும் அடிப்பான், இந்த லட்சணத்துல 2023 வேர்ல்ட் கப்  இந்தியாவுலயா? சுத்தம். நாளைக்கி பாகிஸ்தான் ஏர்போர்ட்ல விடியவிடிய வெளிக்கி போறவரைக்கும் கும்பாபிஷேகம்தான்!  நாளைக்கி பாகிஸ்தான் ஏர்போர்ட்ல அந்நியன் பார்ட் 2, 3, 4, 5 ரிலீஸாக வாய்ப்புண்டு, கபீம்குபாம் கும்பிபாகம் அந்தகூபம் மிருகுன‌ஜம்போ…..