நாளை பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இயங்காது !

 

நாளை பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இயங்காது !

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் அந்த கோவிலில் குன்றின் மீது ஏறித் தரிசிக்கப் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

மிகவும் புகழ் பெற்ற முருகன் கோவிலில் ஒன்றான பழனி கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் அந்த கோவிலில் குன்றின் மீது ஏறித் தரிசிக்கப் பக்தர்கள் சிரமப்பட்டனர். அதனால், பழனியில் மின் இழுவை ரோப் கார் சேவை துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ரோப் கார் சேவைப்பணி நிறுத்தப் பட்டு சோதனை செய்யப்பட்ட பிறகு மீண்டும் இயக்கப் படும். 

ttn

அதே போல் கடந்த ஆண்டு ரோப் கார் சேவை கடந்த ஜூலை மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டு, 70 நாட்கள் சோதனை செய்யப்பட்டது. அதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் மீதும் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த மீண்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படப் போவதாகப் பழனி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.பராமரிப்பு பணி காரணமாக வரும் 13 ஆம் தேதி(நாளை) மட்டும் ரோப் கார் நிறுத்தப்படுகிறது என்றும் அன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் படிப்பதை மற்றும் வின்ச் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.