நாளை நள்ளிரவு 12 மணி முதல் பயணிகள் ரயில் ரத்து!

 

நாளை நள்ளிரவு 12 மணி முதல் பயணிகள் ரயில் ரத்து!

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம்.

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார். அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம். முடிந்தவரை 22 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். யாரும் மெத்தனமாக இருக்க வேண்டாம். கொரோனா இந்தியாவைப் பாதிக்காது என்று எண்ணினால் அது தவறு. வரும் சில வாரங்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார். 

ரயில்

இந்நிலையில் பிரதமரின் சுய ஊரடங்குக்குச் சென்னை மெட்ரோ நிர்வாகமும் ஒத்துழைப்பு அளித்து 22 ஆம் தேதி மட்டும் மெட்ரோ ரயில்களை ரத்து செய்ய உள்ளதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணிவரை பயணிகள் ரயில்கள் ஓடாது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது