நாளை தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் நிலையங்கள் இயங்குமா?

 

நாளை தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் நிலையங்கள் இயங்குமா?

தமிழகம், புதுச்சேரியில் நாளை பெட்ரோல் நிலையங்கள் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நாளை பெட்ரோல் நிலையங்கள் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ttn

இதனால் நாளை மக்கள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் அவசர மற்றும் நெருக்கடி சூழலில், தவிர்க்க இயலாத மற்றும் அவசியமான போக்குவரத்துக்கு மட்டும் எரிபொருள் சேவை வழங்க மிகக்குறைந்த ஊழியர்களுடன் பெட்ரோல் நிலையங்கள் இயங்கும் என்று பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் காலை 7 மணிக்கும் முன்னும், இரவு 9 மணிக்குப் பிறகும் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.