நாளை செய்தியாளர் சந்திப்பு! அரசியல் அதிரடியில் ரஜினிகாந்த்

 

நாளை செய்தியாளர் சந்திப்பு! அரசியல் அதிரடியில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி எனச் சபதம் எடுத்து 3 வருடமாகிவிட்டது. இதன் தொடர்ச்சியில் சமீப நாட்களாகத் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில்கூட குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, மத்திய அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மேலும் இஸ்லாமிய மத குருமார்களையும் சந்தித்து பேசினார். 

 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால்  ரஜினி தலைமையில் கடந்த 5 ஆம் தேதி  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து  ரஜினி மீண்டும் நாளை காலை 8 மணிக்கு மாவட்ட செயலாளர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து பேசவுள்ளார். 

rajini

இதையடுத்து  ரஜினிகாந்த் நாளை காலை 10 மணிக்கு எம்.ஆர்.சி நகரிலுள்ள லீலா பேலசில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளாதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதில் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதாவது ரஜினி கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் கட்சித் தொடங்கப்போகும் நாள், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள்  குறித்தும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.