நாளை சந்திர கிரகணம்: எப்போது தொடங்குகிறது தெரியுமா?

 

நாளை சந்திர கிரகணம்: எப்போது தொடங்குகிறது தெரியுமா?

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது.

இந்தியாவில் நாளைக்கு பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

eclipse

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும். அதன்படி இந்தாண்டிற்கான சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 12.12 மணிக்குத் தொடங்கி  நாளை அதிகாலை 1.31 மணிக்கு முழுமையடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணி 29 நிமிடத்திற்குக் கிரகணம் முற்றிலும் நிறைவடைகிறது. 

eclipse

இந்நிகழ்வை இந்தியாவில் எல்லா பகுதிகளிலிருந்தும் வெறும் கண்களால் கண்டுகளிக்க முடியும்.
அடுத்த முழு கிரகணம்  2021-ம் ஆண்டு  ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் ஆசியா ஆகிய இடங்களில் சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம்.