நாளை கோகுலாஷ்டமி! சிறப்புகள், பலன்கள், வழிபடும் முறைகள் என்ன?

நாளை கோகுலாஷ்டமி! சிறப்புகள், பலன்கள், வழிபடும் முறைகள் என்ன?

அஷ்டமி, நவமியை பொதுவாக நல்ல நாட்கள் இல்லை என்று கருதி வருகிறோம். ஆனால், ராமர் நவமியில் அவதரித்ததால் தான் இராமநவமி கொண்டாடுகிறோம். அதே போல தான் கோகுலாஷ்டமியும். மஹாவிஷ்ணு, நல்லவர்களைக் காப்பதற்காக ஆவணி மாதத்தில் நள்ளிரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார். அதனால் தான் ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நாளை கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம். இந்தியா முழுவதும் இந்த நாளை கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடுகிறார்கள். 

கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும்.  இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத் தேடி வருவதன் அடையாளமாக தான் சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைவது வழிபடும் பழக்கம் இருந்து வருகிறது. கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்.
பூஜை செய்யும் முறை
கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் கோகுலாஷ்டமி பூஜையை செய்வது நல்லது. வீட்டின் வாசலில் கோலமிட்டு, செம்மண் கொண்டு வரைய வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவது போல பாதங்களையே கோலமாக வரைந்து பூஜையறை வரையில் கொண்டு செல்லலாம். வாசலில் தோரணம் கட்டி, மாவிலை வைத்து வாயில் நிலைப்படியை அலங்கரிக்க வேண்டும். அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.  பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது வழக்கம். 

கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த பட்சணங்கள் செய்ய வேண்டும். குழந்தைகள் கடவுளுக்கு சமமானவர்கள். அன்றைய தினத்தில் அவர்களிடம் கோபப்படாமல், அன்பு செலுத்தி அவர்களை மகிழ்வித்தாலே கிருஷ்ணர் மகிழ்வார். குழந்தைகளுக்கான பட்சணங்களைச் செய்யும் போது கூடவே, வெல்லச் சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தட்டை, களவடை, வெல்லச் சீடை மாவில் செய்வது, தேங்காய் பர்பி, திரட்டுப் பால் உட்பட பல பட்சணங்கள் செய்ய வேண்டும். கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம். இந்த கிருஷ்ண ஜெயந்தி உங்கள் இல்லத்தில் சகல சந்தோஷங்களையும் கொண்டு வரட்டும். அவனது குழலிசையைப் போலவே உங்கள் இல்லத்திலும் என்றும் ஆனந்த இசை பரவட்டும்!