நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை! ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசனை 

 

நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை! ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசனை 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள்  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே. 3 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டடுள்ளது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கை தளர்த்துவது குறித்து பிரமரிடம் பரிந்துரைக்க வேண்டிய அம்சங்கள் பற்றி ஆலோசனை நடத்தவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பிரதமரிடம் தெரிவிக்கப்படும். அதாவது முழுஅடைப்பு நீட்டிப்பு, முழு அடைப்பில் வழங்கப்படவுள்ள தளர்வுகள் குறித்த பரிந்துரைகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் உடன் இந்தியாவில் முழு அடைப்பு முடிவுக்கு வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.