நாளை கடைசி நாள் – விஐபி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்

 

நாளை கடைசி நாள் – விஐபி வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் பெரும்பாலான விஐபி வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல்  செய்ய நாளையே கடைசி நாள் என்பதால் பெரும்பாலான விஐபி வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கல் 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும்  ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

lok sabha election

இத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. காட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

39 தொகுதிகள் 179 வேட்புமனுக்கள் 

வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4 நாட்களில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 179 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 29 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியல்பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை ஒருவருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று 18 சட்டசபை தொகுதிகளுக்கு 68 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர்.

lok sabha election

விஐபி வேட்பாளர்கள் 

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை முடிந்து மீண்டும் இன்று (திங்கட் கிழமை) வேட்புமனுக்கள் பெறப்பட இருக்கின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மார்ச் 26 -ஆம் தேதி (நாளை) தான் கடைசி நாள் ஆகும். நாளை செவ்வாய்க் கிழமை என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் இன்றே தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

loksabha election

முக்கிய பிரமுகர்களான கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எச்.வசந்தகுமார், தொல்.திருமாவளவன் ஆகியோர்  இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதால் அவர்களும் இன்று வேட்புமனுக்களை அளிக்கின்றனர். 

இறுதிப்பட்டியல் 

நாளை வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்பு, 27-ந் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட இருக்கின்றன. வேட்பாளர்களின் ஆவணங்கள் அப்போது சரி பார்க்கப்படும். 29-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவை வாபஸ் பெறலாம். மார்ச் 29 – ஆம் தேதி மாலை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.