நாளை இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : எப்போது தொடங்குகிறது தெரியுமா?

 

நாளை இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : எப்போது தொடங்குகிறது தெரியுமா?

இந்த ஆண்டின் முதல் முதலாக வரும் சந்திர கிரகணமானது முழுமையற்று இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும். இந்தாண்டிற்கான  சந்திர கிரகணமானது  நாளை நிகழவுள்ளது.  சந்திர கிரகணத்தில் மொத்தம் மூன்று வகைகள்  உள்ளன. அவை முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், தெளிவற்ற சந்திர கிரகணம் என மூன்று வகைகள் உண்டு.

ttn

இந்நிலையில் நாளை நிகழவுள்ள சந்திர கிரகணமானது இந்திய நேரப்படி, இரவு சுமார் 10.30மணிக்கு ஆரம்பிக்கிற கிரகணம் கிட்டத்தட்ட அதிகாலை 2.30மணி வரை நீடிக்கிறது. , இந்த 4 மணிநேரத்தில் பூமியின் நிழல் நிலவின் பரப்பில் 90% படிந்து, வெளிவட்டப் பாதை மட்டும் நிழல் போலத் தோன்றும். அதனால்  இந்த ஆண்டின் முதல் முதலாக வரும் சந்திர கிரகணமானது முழுமையற்று இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

ttn

இருப்பினும் நாளைய சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றும்  ஐரோப்பிய நாடுகள்,ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிரகணத்தைப் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மூன்று முறை சந்திர கிரகணம் நிகழவுள்ளது.  அதாவது ஜூன் 5 தோன்றவுள்ள  கிரகணத்தைத் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.

ttn

அடுத்து ஜூலை 5 ஆம் தேதி தெளிவற்ற கிரகணமாக தோன்றும்  இதை  அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவிலும்,  நவம்பர் 30  தோன்றும் சந்திர கிரகணத்தை அமெரிக்கா,வடக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் காணமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.