நாளை அதிதீவிர புயலாக மாறும் ‘மஹா’ புயல்!

 

நாளை அதிதீவிர புயலாக மாறும் ‘மஹா’ புயல்!

வடமேற்கு திசையில்  நகர்ந்து நாளை அதிதீவிர புயலாக மாறும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரபி கடலில் உருவாகியுள்ள மஹா  புயல் வடமேற்கு திசையில்  நகர்ந்து அதிதீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

அரபிக்கடலில் கியார் உருவாகியுள்ள நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் மஹா  புயல் உருவாகி வருகிறது. இதனால் 75 கிமீ முதல் 125 கிமீ வரை பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹா  புயல் அரபிக்கடலில்  வடமேற்கு திசையில்  நகர்ந்து நாளை அதிதீவிர புயலாக மாறும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலை வரும் 4 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அப்போது காற்றின் வேகம் 190 கிமீ ஆக வீசக்கூடும்  என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு, மாலதீவுகளைக் கடந்து செல்லும் மஹா புயல்  ஓமன் நாட்டில்  கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.