நாளையுடன் முடிவடையும் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல்! முன் ஜாமீன் கிடைக்குமா?    

 

நாளையுடன் முடிவடையும் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல்! முன் ஜாமீன் கிடைக்குமா?     

முன்னாள் நிதியமைச்சிருக்கு ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைவதால் முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை தெரியும்.

முன்னாள் நிதியமைச்சிருக்கு ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைவதால் முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை தெரியும்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

 P Chidambaram

இதற்கிடையில் சிதம்பரத்தின் வீடு ஏறி குதித்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக 5 நாள் காவலில் எடுக்க சி.பி.ஐ. அனுமதி கேட்டது.  நாளை அதாவது 26ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இந்நிலையில் நீதிமன்ரா காவல் நாளையுடன் முடிவடைகிறது. 

இதற்கிடையில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைதுசெய்யாமலிருக்க அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. ஆகஸ்ட் 26ம் தேதி வரை சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை வழங்கியது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரு வழக்குகள் தொடர்பான விசாரணை நாளை நடைபெறவுள்ளது. மேலும் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் நாளையுடன் முடிவடைகிறது. அதன்பின் அவரை அதிகாரிகள் சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகிறார்கள். அப்போது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி காவல் நீட்டிப்பு கேட்கவில்லை என்றால் ப.சிதம்பரம் டெல்லி சிறையிலடைக்கப்படுவார்.

PC 

இதையடுத்து ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடக்கிறது. இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தால் விடுதலை ஆவார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிவிடும்.