நாளையுடன் முடிகிறது அத்தி வரதர் தரிசனம்: இதுவரை 85 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

 

நாளையுடன் முடிகிறது அத்தி வரதர் தரிசனம்: இதுவரை 85 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அத்தி வரதர்  தரிசனம் நாளை மாலையுடன்  நிறைவடையவுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

நாளையுடன் முடிகிறது அத்தி வரதர் தரிசனம்: இதுவரை 85 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம் : அத்தி வரதர்  தரிசனம் நாளை மாலையுடன்  நிறைவடையவுள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். அத்தி வரதர் வரும் 16 ஆம் தேதி வரையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ள நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவரான சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அத்தி வரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இருப்பினும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் நாளையுடன் அத்தி தரிசனம் நிறைவடைவதால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு அத்தி வரதரைக் குளத்தில் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன. இதன் காரணமாக இன்று மதியம் 12 மணியுடன் வி.ஐ.பி. மற்றும் விவிஐபி தரிசனம் நிறைவடையும் என்றும் நாளை மாலையுடன் தரிசனம் முழுமையாக நிறைவு பெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். 

 

முன்னதாக 45 நாட்களில் தரிசனம் செய்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.