நாற்காலி கேட்ட மூதாட்டியை மிரட்டிய இண்டிகோ பைலட் சஸ்பெண்ட்!

 

நாற்காலி கேட்ட மூதாட்டியை மிரட்டிய இண்டிகோ பைலட் சஸ்பெண்ட்!

மிரட்டும் தொனியில் பேசியதுடன்,   ‘உங்களுக்கு நாகரிகம் தெரியவில்லை. இரண்டு பேரையும் கைது செய்ய வைப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

விமானத்திலிருந்து இறங்க நாற்காலியின் உதவி கேட்ட மூதாட்டியை மிரட்டியதால் அதன் பைலட் மூன்று மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

ttn

சென்னையிலிருந்து பெங்களூரு சென்ற  இண்டிகோ விமானத்தில் 75 வயது மூதாட்டி விஜயலட்சுமி தனது மகளுடன் பயணம் செய்தார். அப்போது விமான நிலையத்திலிருந்து இறங்க  மூதாட்டி நாற்காலி தேவைப்பட்டுள்ளது. ஆனால்  அதை கொண்டுவர ஊழியர்கள் தாமதம் செய்துள்ளனர். இதனால் மூதாட்டியின் மகளும்  பத்திரிகையாளருமான  சுப்ரியா உன்னி நாயர், ஏற்கனவே நாற்காலி உதவி கேட்டிருந்தும் ஏன்  தாமதம்? என்று கேட்க அதற்கு  இண்டிகோ விமானத்தின் பைலட், மிரட்டும் தொனியில் பேசியதுடன்,   ‘உங்களுக்கு நாகரிகம் தெரியவில்லை. இரண்டு பேரையும் கைது செய்ய வைப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ttn

இதுகுறித்து சுப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.  இதையடுத்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டி உத்தரவின் அடிப்படையில், பைலட்டிடம் விசாரணை செய்த டி.ஜி.சி.ஏ (DGCA) அலுவலர்கள், மூதாட்டிக்கு உதவாத இரக்கமற்ற செயலைக் கண்டித்து, மூன்று மாதங்கள் பைலட்டை பணி இடைநீக்கம்  செய்து உத்தரவிட்டனர்.  விரைந்து நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு பத்திரிகையாளர் சுப்ரியா நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.