நாய் வாயில் சவுக்கிதார்: வாண்டடாக பாஜகவை வம்பு இழுக்கும் ஜி.வி.பிரகாஷ்

 

நாய் வாயில் சவுக்கிதார்: வாண்டடாக பாஜகவை வம்பு இழுக்கும் ஜி.வி.பிரகாஷ்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் வாட்ச் மேன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் வாட்ச் மேன் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சர்வம் தளமயம்’. இசையை மையமாக வைத்து வெளியான இப்படத்தின் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

watchman

அதையடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ள ஜி.வி.பிரகாஷின் ஒரு படம் தான் வாட்ச்மேன். விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதையடுத்து வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

watch man

‘சவுக்கிதார்’ என்ற வார்த்தை அமைந்துள்ள இப்படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறிவுள்ளது. ஒரு நாய் வாயில் ஒரு அட்டையை கவ்வி நிற்பது போலவும், அட்டையில் நானும் ‘சவுக்கிதார்’ தான் என்ற வாசகம் அமைந்துள்ளது.

bjp

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘காவலாளி நரேந்திர மோடி’ என தனது கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து, பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஹர்ஷவர்தன், தாமேந்திர பிரதான் உள்ளிட்டோரும் தங்கள் டிவிட்டர் கணக்கின் பெயரை காவலாளி என்று மாற்றியுள்ளனர். இந்த வேளையில், சவுக்கிதார் என்ற வார்த்தையுடன் படத்தின் போஸ்டர் வெளியானது சமூக வலைதள விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளதாக கருதப்படுகிறது.