நாய் குட்டிக்காக தாயை போலீசில் மாட்டிவிட்ட மகள்!

நாய் குட்டிக்காக தாயை போலீசில் மாட்டிவிட்ட மகள்!

வளர்ப்பு பிராணிகளின் மீது சிறுவர், சிறுமிகளுக்கு இருக்கும் அன்பு அலாதியானது. கள்ளமில்லாத அந்த சிறு வயதில், வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, கிளி போன்றவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே கருதி பலரும் பராமரித்து வருகிறார்கள். அப்படி மும்பையைச் சேர்ந்த சினேகா (24) கடந்த ஜனவரி மாதம் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கையில், சாலையோரம் சுற்றித்திரிந்த நாய்குட்டி ஒன்றை பார்த்து அதன் மீது அன்பு செலுத்தியிருக்கிறார்.

அதை ஆசையோடு தம் வீட்டிற்கும் எடுத்து சென்று, ‘குக்கி’ என பெயர்சூட்டி வளர்த்து வந்தார்.  இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி அதிகாலையில் சினேகாவின் தாய் அஸ்வினி, சினேகாவை எழுப்பி, அவரது செல்ல நாய்க்குட்டி குக்கி வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டதாக கூறினார். உடனடியாக அலறியடித்து எழுந்த சினேகா அன்றைய தினம் முழுவதும் குக்கியை தேடி வந்தார். எங்கேயும் அவரது செல்ல நாய்க்குட்டி குக்கி கிடைக்காததால், எண்ட பக்கமாக ஓடிச் சென்றது என்பதைப் பார்ப்பதற்காக அவரது குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். 

sneha

அப்போது சினேகாவை அதிர வைக்கும் படியாக, சினேகாவின் தாய் நாய் குட்டி குக்கியை தூக்கிச் சென்று வெளியே விட்டு வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.  இதுகுறித்து  தாய் அஸ்வினியிடம் கேட்ட போது, அவர் ஒப்பு கொண்டார். ஆனால் எங்கே துரத்தி விட்டேன் என்பதைச் சொல்ல மறுத்து விட்டார்.  இதையடுத்து நாய்குட்டி குக்கியை துரத்திய தாய் மீது போலீசில் சினேகா புகார் அளித்தார். இந்த புகார் மும்பையின் அந்த அபார்ட்மெண்ட் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது.