நாய் கடிச்சுடுச்சா?… உடனடியா இதை செய்ங்க! இல்லைன்னா ஆபத்து!

நாய் கடிச்சுடுச்சா?… உடனடியா இதை செய்ங்க! இல்லைன்னா ஆபத்து!

கூட்டு குடும்பங்கள் அருகி விட்ட இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலும் குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காகவும், வீட்டில் விளையாட ஆள் கிடைக்காத கொடுமையை போக்குவதற்காகவும் பலரும் செல்லப்பிராணிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிகாலைகளில் தொந்தி சரிய தங்களது செல்ல நாய்க்குட்டியுடன் வாக்கிங் போகும் அங்கிள்களில் ஆரம்பித்து, கூடவே உதவியாளரையும் அழைத்துக் கொண்டு நாய்க்குட்டிகள் காலைக்கடன் கழிக்க காற்றார உலா கூட்டிச் செல்லும் யுவதிகள் வரையில் நாய் வளர்க்கும் மோகம் சமீப காலங்களாக அதிகரித்துள்ளது.

dog bite

செல்லப்பிராணிகளை வளர்ப்பது ஆரோக்கியமான விஷயம் தான். அப்படி செல்லப் பிராணிகளை வளர்ப்பது நமது மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. நாய் வளர்ப்பது வீட்டிற்கும் பாதுகாப்பு. ஆனால், ஒரு கட்டத்தில் நம் வீட்டுக் குழந்தைகள், நாய்க்குட்டியுடன் குடும்பத்தின் உறுப்பினராகவே கருதி பாசத்தைப் பொழிய ஆரம்பித்து விடுகின்றன. அதுமாதிரியான நேரங்களில், நாயை தடவிக் கொடுப்பது, தலைக்கீழாக தூக்குவது, வாலைப் பிடித்திழுப்பது போன்ற செயல்களை குழந்தைகள் விளையாட்டாக செய்யத் துவங்குகின்றன. இவை எல்லாமே நம் குழந்தைகளுக்கு விளையாட்டாக இருந்தாலும், நாய்க்குட்டிக்கு விளையாட்டாக இருக்க முடியாதல்லவா? பொறுத்துப் பார்க்கும் நாய்க்குட்டிகள், சமயங்களில் பொறுத்தது போதும் என்று நினைத்து தனது நகங்களால் கீறிவிடவோ, கடித்து விடவோ வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
அப்படி நாம் எதிர்பாராத நேரத்தில் ஏதாவது ஒரு நாய் நகங்களால் கீறியோ, கடிக்கவே செய்தால் உடனடியாக அதற்கு முதலுதவி செய்ய வேண்டும். மருத்துவர்களிடம் மாலை காட்டிக் கொள்ளலாம். நாம் தான் நாய்க்கு தடுப்பூசி போட்டிருக்கிறோமே என்று அலட்சியமாக விடக் கூடாது.  நாய் கடித்தவுடன், நாயினுடைய பற்கள் அது கடித்த இடத்தில் இருக்கும் தோல் திசுக்களைக் கவ்வியிருக்கும். மிகச் சிறிய அளவில் நாயின் பற்கள் நமது தோல்களில் பட்டிருந்தாலும் அது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
நாய் கடித்த தடத்தில் உங்கள் விரல்களை வைத்து மெல்ல அழுத்துங்கள். ஒரு வேளை நாய்கடியினால், பாக்டீரியாக்கள் உள்ள விஷ ரத்தம் உள்ளே சென்றிருந்தாலும், நீங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் அழுத்தும் போது அவை வெளியே வந்து விடும். இந்த செயல், மேலும் அந்த இடத்தில் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்கும். அதன் பின்னர், நாய் கடித்த இடத்தில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். கடிபட்ட இடத்தில் இருந்து கட்டாயம் ரத்தம் நிண நீருடன் சேர்ந்து வடியும். அதனால், சுத்தமான துணியை எடுத்து, அப்படி காயத்திலிருந்து வடியும் ரத்தத்தைத் துடைத்து எடுங்கள். நன்றாக வடிகின்ற ரத்தத்தை துடைத்து எடுத்து விட்டு, பின் கடிப்பட்ட இடத்தை டெட்டால் கொண்டு, சுத்தமான துடைத்து விடுங்கள். அதன் பின்னர் தான் அந்த இடத்தில் ஆண்டிபயாடிக் க்ரீம் போட வேண்டும். ஆண்டிபயாடிக் க்ரீம் போட்டவுடன், காயத்தின் மேல் மெல்லியதாக காட்டன் வைத்து ஒரு கட்டு போடுங்கள். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கொரு முறை அந்த கட்டை மாற்றிவிட வேண்டும். அப்படி கட்டைப் பிரித்து மாற்றும் பொழுது, மீண்டும் டெட்டால் வைத்து, சுத்தமாக துடைத்து விட்டு, மறுபடியும் ஆண்டிபயாடிக் க்ரீம் போட்டு கட்டு போட வேண்டும். 
கூடுமானவரையில், இவை எல்லாம் செய்து விட்டு, உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். நாய்கடியை அலட்சியப்படுத்தாமல், விரைவாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.