நாயை புலியாக மாற்றிய விவசாயி! பயிர்களை நாசம் செய்ய வரும் குரங்குகளை விரட்ட பலே ஐடியா!

 

நாயை புலியாக மாற்றிய விவசாயி! பயிர்களை நாசம் செய்ய வரும் குரங்குகளை விரட்ட பலே ஐடியா!

கர்நாடகாவில் விவசாயி ஒருவர் தனது பயிர்களை குரங்களிடமிருந்து பாதுகாக்க நாய்க்கு புலி போல் பெயிண்ட் அடித்து வயலில் உலாவிட்டுள்ள சம்பவம் தற்போது வைரலாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் நல்லுரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீகண்டா கவுடா. அவரது வயலில் பயிர்களை குரங்குகள் நாசம் செய்து வந்தன. பயிர்களை குரங்களிடமிருந்து பாதுகாக்க அவர்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ஒன்றும் பலன் கொடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உத்தர கன்னட மாவட்டத்தில் பட்கல் பகுதியில் ஒரு விவசாயி தனது வயலில் புலி போன்ற பொம்மையை பயமுறுத்துவற்காக வைத்து இருந்தார். அதனை பார்த்த கவுடா அது போன்ற புலி பொம்மையை வாங்கி தனது வயலின் ஒரு பகுதியில் வைத்தார்.

நாய்

அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த புலி பொம்மையை பார்த்து பயந்து குரங்கள் அந்த பகுதி வருவதை நிறுத்தி விட்டன. இதனையடுத்து வயலின் மற்றொரு பகுதியிலும் அது போன்ற பொம்மையை வைத்தார். அதற்கும் நல்ல பலன் கிடைத்தது. இருப்பினும் பொம்மையை நீண்ட நாளைக்கு நாம் சார்ந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்த கவுடா, தனது நாய்க்கு புலி போல் பெயிண்ட் அடித்து வயலில் உலா விட்டார். வயலில் சுற்றி வரும் அந்த நாயை புலி என நினைத்து அந்த பகுதிக்கு வருவதை குரங்கள் நிறுத்தி விட்டன.

வயலை புலியாக பாதுகாக்கும் நாய்

பயிர்களை விலங்குகளிடமிருந்து காக்க விவசாயிகள் புதுபுது திட்டங்களை செயல்படுத்தி பார்க்கின்றனர். சோராப் தாலுாகாவில் உள்ள கக்கராசி கிராமத்தை சேர்ந்த விவசாயி எஸ். சிதானந்தா கவுடா, தனது மக்கா சோள வயலில் குரங்குகளை விரட்ட நாய் குரைப்பது போன்ற ஆடியோவை பயன்படுத்தி வருகிறார்.