நாயிக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஓட்டிய குடும்பம்! காதலுடன் கலந்த கண்ணீர் அஞ்சலி!! 

 

நாயிக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஓட்டிய குடும்பம்! காதலுடன் கலந்த கண்ணீர் அஞ்சலி!! 

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் சங்கர் என்பவர் தான் வளர்த்து வந்த செல்லப்பிராணி டாமி என்ற நாயிக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு பொம்மேரியன் வகையைச் சேர்ந்த நாய் குட்டி ஒன்றை வாங்கி வந்து டாமி என்று பெயர் வைத்து வளர்ந்து வந்துள்ளார். தனது குடும்பத்தில் தனது குழந்தைகளை எவ்வாறு செல்லமாக வளர்த்து வந்தாரோ அதேபோல் தான் வளர்த்துவந்த செல்லப்பிராணி டாமியையும் குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தையாக வளர்த்து வந்துள்ளார். சங்கர் வெளியூர் செல்லும் போதும்,வெளி மாநிலங்களுக்கு செல்லும் போதும்,கோயில்,திருமண நிகழ்வுகள் மற்றும் அனைத்து விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும் குடும்பத்தோடு டாமியையும் அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

 

இந்த நிலையில் 12 வருடங்களாக தான் வளர்த்து வந்த செல்லப்பிராணி டாமி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. டாமி உயிரிழந்த சம்பவம் சங்கரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. டாமி இறந்து ஓர் ஆண்டு ஆன நிலையில் அதனை நினைவு கூறும் வகையில் சங்கர் கடந்த 13 ஆம் தேதி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை டிஜிட்டல் பேனர் வைத்து டாமி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலித்தி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.