நாம் தமிழர் வேட்பாளருக்கு உருட்டுக்கட்டையால் விழுந்த அடி..!  சம்பவத்தை வெளியில சொல்லாத சண்முவம்!

 

 நாம் தமிழர் வேட்பாளருக்கு உருட்டுக்கட்டையால் விழுந்த அடி..!  சம்பவத்தை வெளியில சொல்லாத சண்முவம்!

‘நாம் தமிழர்’ கட்சியின் தம்பிகள் நிறைய இடங்களில் நல்லது செய்து வந்தாலும், ஒரு சில தம்பிகள் சிலிர்த்துக் கொண்டு அவர்களின் கட்சி தலைவர் சீமானைப் போலவே கோபத்தைக் கண்களில் ஏந்திக் கொண்டு திரிவதால் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி தொகுதி வேட்பாளராக களம் கண்டவர் வினோத்குமார்.

‘நாம் தமிழர்’ கட்சியின் தம்பிகள் நிறைய இடங்களில் நல்லது செய்து வந்தாலும், ஒரு சில தம்பிகள் சிலிர்த்துக் கொண்டு அவர்களின் கட்சி தலைவர் சீமானைப் போலவே கோபத்தைக் கண்களில் ஏந்திக் கொண்டு திரிவதால் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி தொகுதி வேட்பாளராக களம் கண்டவர் வினோத்குமார். இவர் நேற்று புதுக்கோட்டைக்கு செல்லும் போது, வழியில் இருந்த சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல், தன்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்று சொல்லி சென்றுள்ளார். தேர்தல் முடிந்து மண்ணைக் கவ்விய இத்தனை நாட்களுக்குப் பின்னும் வேட்பாளரே இப்படியா என்றெல்லாம் கேள்வி கேட்காமல் முழுசா படிச்சுப் பாருங்க… அப்புறம் வினோத் குமார் சென்ற வேலையை முடித்துக் கொண்டு அதே சுங்கச்சாவடி வழியாக திரும்பி வந்த போதும், மறுபடியும் கட்டணம் செலுத்தாமல், நான் நாம் தமிழர் கட்சி என்று சொல்ல ஆரம்பித்ததும், யாராயிருந்தாலும் சுங்கக் கட்டணம் செலுத்தி விட்டு செல்லுங்க’ என்று ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சுங்கச்சாவடியில் இருந்த ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

vinoth

பணியில் இருந்தவர்களை வட மாநிலத்தவர்கள் என நினைத்து தமிழ்நாட்டில் வந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கிறியா ? என்று கேட்டப்படியே உருட்டுக் கட்டையை எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை வினோத் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், தாக்கிய பின்னர் தான் தெரிந்துள்ளது சுங்கச்சாவடிப் பணியில் இருக்கும் அத்தனைப் பேரும் தமிழர்கள் என்று. 
தமிழனுக்கு தமிழன் சளைச்சவனாகவா இருப்பான். அடி வாங்கியவனும் தமிழன் தானே. உடனே அடிவாங்கிய ஊழியருக்கு ஆதரவாக அங்கிருந்த 15க்கும் மேற்பட்டோர், வினோத்குமாரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். புரட்சிப் போராட்டத்தில் சட்டை எல்லாம் கிழிந்த நிலையில் வினோத்குமார் தப்பியுள்ளார். உருட்டுக் கட்டையால் அடிவாங்கியதில், முதுகுத் தோல் எல்லாம் பிய்ந்து பலத்த காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ந்த நாம் தமிழர் தம்பி, சம்பவத்தை வெளியில் சொன்னால் அவமானம் என்று புகார் தராமல் இருந்திருக்கிறார். 
அடித்தவர்கள் கம்பீரமாக சுங்கச்சாவடி தரப்பில் புகார் அளித்ததால் வினோத்குமாரும் புகார் அளித்ததாகவும், இதன் பேரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.