நாம் தமிழர் சீமானுக்கு இவ்வளவு சொத்துக்களா… வாய்பிளக்க வைக்கும் பட்டியல்..!

 

நாம் தமிழர் சீமானுக்கு இவ்வளவு சொத்துக்களா… வாய்பிளக்க வைக்கும் பட்டியல்..!

சீமான் இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை… அதற்குள் இத்தனை கோடிகள் சொத்துக்களா? என வாய் பிளக்கிறார்கள் மற்ற தமிழர்கள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொத்து மதிப்பு விபரங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அவர் கட்சி ஆரம்பித்து ஒரு கவுன்சிலர் சீட்டைக்கூடப்பிடிக்கவில்லை அதற்குள் இவ்வளவு சொத்துக்களா? என விவாதங்கள் கிளம்பியுள்ளன. 

அவரது சொத்து பட்டியல் இதோ…
நெல்லை கோலா பாக்டரியில் 7 சதவிகித பங்கு..
விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 8 கிவுண்ட் நிலம்.
பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம்.

seeman

ஆவடியில் 6 ஏக்கர் நிலம்.
பங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள்.
சென்னையில் பிரபல கிருத்துவ பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி.
இலங்கையில் பவர் பிளான்ட் தொழில்.
விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச்.
மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம்.

கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம்.
மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு.
நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் ஸ்பெசல் கவனிப்பு.
ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக  மூன்று தவணைகளில் ரூ1.43 கோடி வரை வாங்கியது. 
பழனி அருகே தென்னந்தோப்பு.
ஊட்டியில் எஸ்டேட் தொழில். 

seeman

இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான். கடைசியில் அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதாக ஒரு வீடு உள்ளது.

வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்க.. “ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?” என்று பதிலளித்தார் சீமான். இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. இல்லை… அதற்குள் இத்தனை கோடிகள் சொத்துக்களா? என வாய் பிளக்கிறார்கள் மற்ற தமிழர்கள்.seeman

ஆனால் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொத்து விவரப்பட்டியல்.
சீமானுக்கு 35.36 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் ரூ.8.97 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி கயல்விழிக்கு ரூ. 52.25 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.29 லட்சம் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்பு மனு தாக்கலில் தெரிவித்து இருந்தார்.