நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா? சட்டமும் அனுமதிக்கிறது: நடிகை த்ரிஷாவிடம் புரொபோசல் வைத்த பிரபல நடிகை!?

 

நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா? சட்டமும் அனுமதிக்கிறது: நடிகை த்ரிஷாவிடம் புரொபோசல்  வைத்த பிரபல நடிகை!?

நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகை த்ரிஷாவிடம் பிரபல நடிகை ஒருவர் கேட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நடிகை த்ரிஷாவிடம் பிரபல நடிகை ஒருவர் கேட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

trisha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்  வருபவர் நடிகை த்ரிஷா. இவர் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ரசிகர்களின் கனவு கன்னியாக இன்னும் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். கோலிவுட் சினிமாவுக்குள் எத்தனை நடிகைகள் வந்தாலும், போனாலும் சரி  த்ரிஷாவுக்கு நிகர் த்ரிஷா தான் என்றுசொல்லும் அளவிற்கு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

trisha

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்குத் திரையுலகைச் சேர்ந்தவர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை சார்மி த்ரிஷாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று முழங்காலிட்டு காதலரைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறதுஎன்று பதிவிட்டுள்ளார். மேலும் சார்மியை த்ரிஷா இறுக்கமாகக் கட்டிப் பிடித்து முத்தமிடும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

Baby I love u today n forever ?
Am on my knees waiting for u to accept my proposal ? let’s get married?? ( now toh it’s legally allowed also ? ) #happybirthday @trishtrashers ???? pic.twitter.com/e2F3Zn3Dp3

— Charmme Kaur (@Charmmeofficial) May 4, 2019

இந்த போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் க்யூட் ஜோடி என்று கிண்டலாக கமெண்ட்செய்து வருகின்றனர்.