நாமக்கல்லில் ஒரு கோடி கோழிகளை அழிக்க முடிவு!

 

நாமக்கல்லில் ஒரு கோடி கோழிகளை அழிக்க முடிவு!

நாமக்கல்லில் 60 வாரங்களுக்கு மேல் உள்ள முட்டை இடும் கோழிகளை அழிக்க பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல்லில் 60 வாரங்களுக்கு மேல் உள்ள முட்டை இடும் கோழிகளை அழிக்க பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல்லில் 10 கோடி முட்டைகள் தேக்கம், தமிழகத்தில் இருந்து கேரளா மற்றும் பெங்களூருக்கு முட்டை அனுப்புவது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும்  தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சத்துணவிற்கு முட்டை அனுப்புவதும் நிறுத்தப்பட்டதால் முட்டைகள் தொடர்ந்து தேக்கமடைந்துள்ளனர். நாமக்கல் பண்ணைகளில் சுமார் 25 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால்  60 வாரங்களுக்கு மேல் உள்ள முட்டை இடும் 1 கோடி கோழிகளை அழிக்க பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல் கோழி
கொரோனோ பாதிப்பால் கோழிப் பண்ணை தொழிலில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நாமக்கல் மண்டலத்தில் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தினசரி 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், கோழிப் பண்ணையாளர்கள் வாங்கிய கடனுக்கான ஓராண்டிற்கான வட்டியை தள்ளுபடி செய்திட வேண்டும் அல்லது தவணை கட்டுவதை ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.