நாமக்கலில் நாளை முதல் எல்லா குடும்பங்களுக்கும் வண்ண அட்டைகள்

 

நாமக்கலில் நாளை முதல் எல்லா குடும்பங்களுக்கும் வண்ண அட்டைகள்

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வண்ண அட்டைகள் வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்.பி.அருளரசு கூறினார்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வண்ண அட்டைகள் வழங்கப்படும் என அம்மாவட்ட எஸ்.பி.அருளரசு கூறினார்.

தமிழகத்தில் நேற்று காலை 621 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நேற்று இரவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்தது. குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது.  இந்த கொரோனா வைரஸால் ஏற்கனவே தமிழகத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளார்.

namakkal

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயதுடைய இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனிப்பிரிவில் வைத்து  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

namakkal

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாளை முதல் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் வண்ண அட்டைகள் வழங்கப்படும் என்று நாமக்கல் எஸ்.பி.அருளரசு தெரிவித்தார். இந்த அட்டைகளை பயன்படுத்தி வாரத்தில் 2 நாட்களுக்கு மட்டுமே ஒவ்வொரு குடும்பத்திலும் வீட்டில் இருந்து வெளியே வந்து பொருட்களை வாங்கி செல்ல முடியும். இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அருளரசு தெரிவித்தார்.